×
 

விஞ்ஞானியின் உயிரைப் பறித்த பார்க்கிங் தகராறு.. அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

பஞ்சாபில் பார்க்கிங் பிரச்சனையால் விஞ்ஞானி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய விஞ்ஞானி ஒருவர், டூ வீலர் பார்க்கிங் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டார். இதையொட்டி பக்கத்து வீட்டில் வசித்த ஐடி நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கொலை செய்யப்பட்ட 39 வயதான விஞ்ஞானியின் பெயர் அபிஷேக் ஸ்வர்ன்கர். ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணிபுரிந்த இவர் சில நாட்களாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசித்து வந்தார். 

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்த அவருக்கு மொகாலியில் 66 ஆவது செக்டார் பகுதியில் வீடு ஒன்று இருந்தது. 

இதையும் படிங்க: அமெரிக்காவுக்கே சவால் விட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன்.. இந்தியாவில் கைது..!

சமீபத்தில் தான் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஐடி நிபுணரான மோண்டி என்பவர், விஞ்ஞானியின் வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக அபிஷேக்கிடம் தகராறு செய்தார். 

இரவு எட்டு முப்பது மணி அளவில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கி வன்முறையில் முடிந்தது. மோண்டி முதலில் அபிஷேக்கை வாய்மொழியாக திட்டி பின்னர் உடல் ரீதியாக தாக்கியதாக சிசிடிவி காட்சிகளில் தெரிய வந்தது. 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் ரோமா என்பவர், "நான் பலத்த அலற சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன், மோண்டி அபிஷேக்கே தாக்குவதையும், அவர் தரையில் விழுந்து கிடந்த போது மோண்டி அவருடைய மார்பில் பலமுறை ஓங்கி குத்துவதையும் நான் பார்த்தேன்" என்று தெரிவித்தார். 

ஏற்கனவே அபிஷேக் மயங்கி விழுந்ததும், பயந்து போன மோண்டி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் வரும் வழியிலேயே அபிஷேக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மோண்டி ஒரு காரில் மோதியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரி சுகந்திப் சிங் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனைக்கு பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். 

விஞ்ஞானி அபிஷேக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து தீவிர டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை தாக்கிய மோண்டியின் செயல், மனிதாபிமானம் அற்றதாக பார்க்கப்படுகிறது. 

கொலை செய்யப்பட்ட அபிஷேக் புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி. அவருடைய ஆராய்ச்சி 'ஜர்னல் ஆப் சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டது. அவருடைய மறைவுக்கு IISER ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தது. 

நாங்கள் புத்திசாலித்தனமான ஒரு மனிதனை இழந்து விட்டோம். இதுபோன்ற வன்முறை செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share