×
 

உண்மையைக் கேட்க திமுக எம்பிக்கள் தயாரா இல்ல! விளாசிய அண்ணாமலை

பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய உண்மையைக் கேட்க திமுக எம்பிக்கள் தயாராக இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் தொடங்கியது. அப்போது தமிழக மாணவர்களை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக கூறி திமுக எம்பிக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். தமிழக மாணவர்களை தமிழக அரசு தான் வஞ்சிக்கிறது என்ற வாதத்தை முன்வைத்த மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்பிக்கள் குறித்து விமர்சனங்களை முன் வைத்தார். 

இதனால் கொதித்து எழுந்த திமுக எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவையிலும் தங்களது பதிவு செய்தனர். அது மட்டுமல்ல  ஆங்காங்கே தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களை திமுகவினர் முன்னெடுத்தனர். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: கருப்பு நிற உடை.. கர்ஜித்த கனிமொழி, கொந்தளித்த வைகோ.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் பேசிய போது தான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசவில்லை என்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்ததாக கூறினார். 

ஒருவேளை சகோதரி கனிமொழி அவர்களுக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பெருந்தன்மையோடு தர்மேந்திர பிரதான் கூறியதாகவும், அவர் மன்னிப்பு கேட்டிருக்க தேவையே இல்லை என்பதுதான் தங்களின் கருத்து எனவும் கூறினார். ஏனெனில் அவர் தவறாக எதையும் பேசவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களை அவமதித்ததாக கூறியதாகவும், அவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக எம்பிக்களை அவமதித்ததாக கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

தமிழக எம்பிக்களை பற்றி பேசினால் அது எப்படி தமிழக மக்களை பேசியதாக அடையாளப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை அப்படியானால் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மேடைகளில் பிரதமர் மோடி குறித்து தவறாக பேசுவது இந்திய மக்களைப் பற்றி பேசுவதாக ஆகிவிடுமா என கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையை கூறுவதால் திமுக எம்பிக்கள் அதனை திரித்து கூறுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, முதலமைச்ச ஸ்டாலின் இரண்டே நிமிடங்களில் 10 பொய்களை கூறியதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை பழி வாங்குகிறது மத்திய அரசு..! தமிழச்சி தங்கபாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share