பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது.
வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை, மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. எனவே இன்றைய அமர்வு மிகவும் பேசுபொருளாக மாறி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்து முடிந்தது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். தொடந்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: பிஜேபிக்கு தலைவலியை கொடுக்க திமுக எம்.பி.க்கள் தீர்மானம்..! பிற கட்சிகளுடன் கைகோர்க்க அதிரடி
பின்னர் நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு தொடங்குகிறது. இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொகுதி மறு சீரமைப்பு, மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்வாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தவில்லை... உள்துறை அமைச்சகம் மீது நிலைக்குழு குற்றச்சாட்டு..!