×
 

வயது கூடக்கூட அதிகமாகும் பென்ஷன்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

இதற்கான அறிவுரைகளை தொடர்புடைய துறைகள் மற்றும் வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது

மிக அதிக வயதான ஓய்வூதியதாரர்களுக்கு உடல்நிலையை கருத்தில் கொண்டு, கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மக்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ''ஆறாவது மத்திய சம்பளக் கமிஷன் ஒப்புதலின்படி, 80 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம், 85 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 30 சதவீதம், 90 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீதம், 100 வயதை எட்டும் ஓய்வூதியதாரர்களுக்கு 100 சதவீதம் என்ற அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த வயதை எட்டியதும், தானாகவே, கூடுதல் பென்சனை வங்கிகள் வழங்கத் துவங்கி விடும். வயது கூடும்போது, அவர்களின் உடல்நிலையை கருத்தில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுரைகளை தொடர்புடைய துறைகள் மற்றும் வங்கிகளுக்கு அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குக..! சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

இதையும் படிங்க: கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... குறைந்தபட்ச இ.பி.எஃப் பென்சன் 7500; பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share