போனில் பேச விடாமல் இடையூறு! கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்...
செல்போனில் பேசுவதற்கு இடையூறாக இருந்த மாணவியை விடுதி சமையலர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட தொலைவில் இருந்து வரும் மாணவர்களின் சிரமத்தை போக்கி, அரசு பள்ளி மாணவிகளும் பயன்பெறும் வகையில் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி தங்கும் விடுதியில் படித்து வரும் மாணவியை விடுதி சமையலர் ஆத்திரத்தில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான கவுசல்யா என்ற மாணவியும் பசும்பலுரை சேர்ந்த சுமதி என்ற 12 வயது மாணவியும் வெண்பாவூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் தங்கி வரும் விடுதியில் செல்வி என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: 'அடுத்த பிரதமர் நானா?'.. வெளிப்படையாக பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!!
இந்த நிலையில் சமைப்பதற்காக ஊறவைத்த அரிசியை செல்வி கையில் எடுத்து, கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு மீத அரிசியை ஊறவைத்து பாத்திரத்தில் போட்டுள்ளார். இதனைப் பார்த்த மாணவிகள் செல்வி அரிசியில் எச்சில் துப்பி விட்டதாக வார்டன் சங்கீதாவிடம் புகார் கூறியுள்ளனர்.
எனவே எச்சில்பட்ட அரிசியை கீழே போட்டுவிட்டு வேறு அரிசியில் சமைக்குமாறு சங்கீதா கூறிய நிலையில், செல்வி அதனை மறுத்துள்ளார். பலமுறை வார்டன் சொல்லியும் கேட்காத நிலையில், ரங்கநாயகி என்பவர் மாணவியருக்கு மதிய உணவை சமைத்து வழங்கி உள்ளார்.இதனால் மாணவிகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த செல்வி, மதிய நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வி போன் பேச விடாமல் கத்திக் கொண்டிருப்பதாக கூறி அவர்கள் மீது கல் எரிந்துள்ளார். இதில் கௌசல்யா மீது கல் பட்ட நிலையில் தட்டி கேட்ட மாணவி ஸ்ரீமதியை கால் முட்டி பகுதியில் செல்வி பலமாக கடித்துள்ளார். காயமடைந்த மாணவிகள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸின் எடுபிடிகள்.. பிரதமர் மோடி மீதும் பாஜக அரசு மீதும் சிபிஐ ஆவேச தாக்கு!!