“ஆதாரங்கள நா தர்றேன்...” - சீமானுக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அண்ணாமலை - அதிர்ந்து போன த.பெ.தி.க!
பெரியார் பேசிய கருத்துக்களை சீமான் பொதுவெளியில் பேசியிருக்கக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரியார் பேசிய கருத்துக்களை சீமான் பொதுவெளியில் பேசியிருக்கக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகளான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெரியார் பேசியதை எல்லாம் தற்போது பொதுவெளியில் பேசினால் மக்கள் அருவெறுப்பு கொள்வார்கள் என்றார்.
பெரியார் குறித்து சர்ச்சை கருத்து:
நேற்று கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “தாய், மகள், அக்கா, தங்கை என்ற பேதம் பாராமல் யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். சீமானின் இந்த கருத்து பெரியார் ஆதரவாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பாஜகவில் அதிகரிக்கும் பெண் தலைவர்கள்..! படை திரட்டி கெத்து காட்டிய தமிழிசை..!
இதனையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர் . இதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டிருந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் காலை முதலே சீமான் வீட்டின் முன்பு குவிய ஆரம்பித்தனர்.
ஆதாரம் கேட்ட கு.ராமகிருஷ்ணன்:
எங்கே இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துவிடுமோ? என முன்பே கணித்த காவல்துறையினர், சீமான் வீட்டின் முன்பு பாதுகாப்பை பலப்படுத்தினர். நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு 10க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதோடு, அந்த வீட்டைச் சுற்றிலும் இருந்த 3 வழிகளிலும் பேரிகார்டுகளைப் போட்டு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியினரும் அதிக அளவில் குவிய ஆரம்பித்தனர். இப்படியே விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை குண்டுகட்டாக தூக்கி, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த பரபரப்புகளுக்கிடையே பொறுமையாக வந்து சேர்ந்த கு.ராமகிருஷ்ணன், “சங்கிகள் முந்தைய காலங்களில் பேசியதை சீமான் இப்போது பேசுவதாகவும், சீமானும் சங்கியாக மாறிவிட்டதாகவும் சகட்டுமேனிக்கு சாடினார். தொடர்ந்து பேசிய அவர் பெரியார் எப்போது அப்படி பேசினார் என்பதற்கான ஆதாரங்களை தர வேண்டும். அதுவரை சீமானை எங்கும் நுழைய விடமாட்டோம் என்றும் எச்சரித்திருந்தார்.
அடித்துக்கூறிய அண்ணாமலை:
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெரியார் அதுபோல் பேசவே இல்லையா? ரியார் எங்கு சொன்னார்? எந்த புத்தகத்தில் சொன்னார்? என சீமானுக்கு ஆதரவான அனைத்து ஆதாரங்களையும் நான் தருகிறேன். ஆனால் இதனை பொது இடத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
பெரியார் பேசியதற்கான ஆதாரம் அடங்கிய புத்தகம் என்னிடம் உள்ளது. அதை அவர் காவல்துறையிடம் ஆதாரமாக காண்பிக்கலாம். பெரியார் பேசிய நிறைய விஷயங்களை இப்போது பேசினால் மக்களுக்கு அருவெறுப்பு வந்துவிடும். சீமான் சொன்னது சரி தான் என நான் கூறவில்லை, அவர் பேசியதற்கான காரணத்தை அவர் தான் சொல்ல வேண்டும். ஆனால் சீமான் கூறிய கருத்தை பெரியார் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை தரமட்டுமே நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.70 கோடி சொத்து..! பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் வெளியிட்ட டாக்குமெண்ட்... பின்னணி என்ன?