கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. காளை முட்டியதில் பார்வையாளர் பலி..!
புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன.
வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்த காளைகளுக்கு சற்றும் சலிக்காமல் மாடுபிடி வீரர்களும் அசாத்திய விளையாட்டை வெளிப்படுத்தி காளைகளை அடக்கினர். இந்த போட்டியினை காண்பதற்காக ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். முன்னதாக போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சிங்கிபுரம் கோயில் திருவிழா: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்... அடக்கிய வீரர்கள்...!
அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காலை ஒன்று பார்வையாளர்களின் பகுதிக்குள் நுழைந்ததால் பார்வையாளர்கள் தெறித்து ஓடினர். அப்போது ஆவேசமடைந்த காலை பார்வையாளர் மாரிமுத்து என்பவரை முட்டியதில், மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: களத்தை அதிரவிட்ட காளைகள்.. அடங்க மறுத்த காளைகளை மடக்கிப் பிடித்த மாடுபிடி வீரர்கள்..