×
 

வரலாற்று சிறப்புமிக்க மசோதா..! முதல்வருக்கு மனதார நன்றி சொன்ன மாற்றுத் திறனாளிகள்..!

மாற்றுத் திறனாளிகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க மசோதா முன்மொழிந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார். மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி கூறியுள்ளனர்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத் தலைவர் தங்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையும் படிங்க: நொண்டி, கூன், குருடு.. ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..? வலுக்கும் கண்டனம்..!

அப்போது, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசோதா என கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் வாழும் இடத்திலேயே மறுவாழ்வு கொடுக்கும் மசோதா எனவும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் மாற்று திறனாளிகள் கவுன்சிலராக உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share