×
 

MAGA+MIGA=MEGA என்றால் என்ன? பிரதமர் மோடியின் புதிய கோட்பாடு என்ன?

மகா+மிகா+=மெகா என்ற புதிய கோட்பாட்டை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபின் வெளியிட்டார். 

(MAGA) என்பது மேக் அமெரிக்கா கிரேட் யகைன், அதாவது அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம் என்பதாகும், (MIGA) என்பது மேக் இந்தியா கிரேட் யகைன், அதாவது இந்தியாவை மீண்டும் உயர்த்துவோம், இந்த இரு கூட்டுறவும் சேர்ந்தது மெகா(MEGA) பார்ட்னர்ஷிப் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டை சந்தித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். புதிதாக பதவியேற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்பின், வெள்ளை மாளிகையில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார். 
அமெரிக்க அதிபராக 2வதுமுறையாக பதவி ஏற்றுள்ள அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்றபின் முதல்முறையாக பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

அதன்பின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மந்திரமான அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம் என்பதைப் போல் இந்தியாவை மீண்டும் சிறப்பாக்க வேண்டும். இந்த மகா மற்றும் மிகா இணைந்தது வளர்ச்சிக்கான மெகா கூட்டணி .

இதையும் படிங்க: உளவுத்துறையில் கூட்டுறவு: அமெரிக்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தாரகமந்திரமான மெகா- அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் என்ற முழக்கத்தை அமெரிக்க மக்கள் நன்கு அறிவார்கள். இந்திய மக்களும்கூட பாரம்பரியம், வளர்ச்சியோ நோக்கி வேகமாக நகர்ந்து விக்சித்பாரத் 2047 நோக்கி நகர்கிறார்கள். 
அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் யகைன்-மிகா. அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் மகா+மிகா= வளர்ச்சிக்கான “மெகா” பார்ட்னர்ஷிபாக மாறும், நம்முடைய இலக்குகளை, நோக்கங்களை அடைய உதவும்.

2030ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகம் 50000 கோடி டாலரை எட்ட வேண்டும் என்று இருவரும் உறுதியளித்துள்ளோம். இருதரப்பு வர்த்தகத்தில் இருவரும் பயன் அடையும் வகையில் தேவையான பணிகளை இரு நாடுகளின் அதிகாரிகளும் விரைவில் பேசி முடிவு செய்வார்கள். 
இரு நாடுகளும் கூட்டமாக மேம்படுதல், கூட்டு உற்பத்தி, தொழில்நுட்பங்களைப் பகிர்தல் ஆகிய திசையை நோக்கி செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கச்சா எண்ணெய் மற்று எரிவாயு வர்த்தகம் ஸ்திரப்படுத்தப்படும்.

எரிசக்தி துறையில் கட்டமைப்பு, முதலீடு அதிகப்படுத்தப்படும். அணுசக்தி துறையைப் பொருத்தவரை, இருதரப்பு நாடுகளும் ஆழமான கூட்டுறவை வலுப்படுத்தி, சிறிய அணுஉலைகளை அமைப்பது பற்றி பேசினோம். இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களை தயார் செய்வதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பம், தளவாடங்கள் நம்முடைய சக்தியை பெரிதாக்கும்.

வரும் நாட்களில் அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பும் பலன் பெறும் வகையில் சமூகமான வர்த்தக உடன்பாடுகள் பேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின் அவரைச் சந்தித்த 4வது உலகத் தலைவர் பிரதமர் மோடியாகும்.

இதையும் படிங்க: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. "பாரத் மாதா கி ஜே" என வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share