மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் புத்தாண்டு கொண்டு வரட்டும்..! பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!
தமிழ் புத்தாண்டை ஒட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார். அதில், மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தை ஒட்டி அன்பான வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார். அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க: டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி..! கடும் வீழ்ச்சியை சந்தித்த கச்சா எண்ணெய் விலை..!
இதே போல், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரசால் தான் நக்சலிசம் வளர்ந்தது..! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர்..!