தப்ப முயன்ற திருடன்.. சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்..!
கடலூர் மாவட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பு முயன்ற திருடனை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் மற்றும் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் அருகே திருடன் ஸ்டீபன் 10 சவரன் நகை லேப்டாப் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருடியதாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்து, ஸ்டீபனை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் நகைகளை ஸ்டீபன் சித்தலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நகைகளை மீட்க சென்ற போலீசாரை, ஸ்டீபன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்க முற்பட்டு தப்பு முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: துப்பாக்கி ஏந்திய போலீசுடன் எஸ்டிபிஐ நிர்வாகியின் கடைக்குள் புகுந்த ED... 1 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை...!
சுதாரித்துக் கொண்ட போலீசார், திருடன் ஸ்டீபனை துப்பாக்கியால் சுட்டு படித்தனர். இதில் திருடன் ஸ்டீஃபனுக்கு கால் முட்டியில் லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஸ்டீபன் மீது குமரி திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த பெல் ஊழியர்..! கொத்தாக தூக்கிய NIA