×
 

காவி கலரைக் கண்டாலே ‘டபால்’ என தடுத்து நிறுத்தும் காவல்துறை... பாஜக மேல அவ்வளவு பயமா? 

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் எனக் கூறி சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவி நிற உடையில் சென்றாலே  காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் எனக் கூறி சென்னையின் பல்வேறு இடங்களில் பாஜாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவி நிற உடையில் சென்றாலே  காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

டாஸ்மார்க் முறைகேடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாஸ்மார்க் உடைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி சார்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம்
முழுவதும் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் சென்னையில் இருக்கக்கூடிய எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்,  அப்பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்கள் மற்றும் நபர்களையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: இந்தியாவை ‘இந்து பாகிஸ்தான்’ ஆக பாஜக மாற்றுகிறது.. சஞ்சய் ராவட் காட்டமான விளாசல்..!

பாரத ஜனதா கட்சி என்று தெரிந்தால் உடனடியாக கைது செய்து அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அவர்களை தங்க வைக்கின்றார்கள். இந்நிலையில் தாளமுத்து நடராஜ மாளிகையினுடைய நுழைவாயிலில் இருக்கக்கூடிய இடத்தில் போலீசார்  குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் காவி உடை அணிந்து வருபவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் பாரதிய ஜனதா கட்சி சார்ந்த ஐடி கார்டு இருந்தாலே, உடனடியாக அவர்களை கைது செய்து பேருந்து மூலமாக அருகில் இருக்கக்கூடிய ராஜரத்தினம் மைதானத்தில் அமர வைக்கிறார்கள். 

தொடர்ந்து, அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் பாரதிய ஜனதா கட்சியினுடைய கொடி, சின்னம் இருந்தாலும் அவர்களையும் கைது செய்து     கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் காவி துண்டும் அதேபோன்று காவி உடை அணிந்து வந்தார்கள் அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

இதையும் படிங்க: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. மு.க.ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி என ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share