பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. போலீஸ் விசாரணையில் கலைந்த மெக்கானிக் வேஷம்.. நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருடு போன 11 பைக்குகளை மீட்ட போலீசார், டூவீலர் மெக்கானிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(37) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது.
மணிகண்டன் மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த 11 பைக்குகளை திருடி உள்ளார்.திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த நபர்களிடமிருந்து பைக்குகளை மீட்ட போலீசார் மெக்கானிக் மணிகண்டன் மீது சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: பைக் திருட்டு.. பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்றதால் மக்களிடம் சிக்கிக்கொண்ட திருடர்கள்..
இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!