×
 

தலை தூக்கிய கந்துவட்டி பிரச்சனை.. சூசனமான முறையில் கேட் போட்ட போலீஸ்..!

திருநெல்வேலியில் அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல் செய்த திமுக பிரமுகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த வி.கே.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கந்துவட்டி மற்றும் நிதி நிறுவனம் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திமுக கட்சியில் பொறுப்பு வகுத்து வரும் சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அனுமதி இன்றி நிதி நிறுவனம் நடத்தியும் கந்துவட்டி வசூலித்ததாகவும் தொடர் எழுந்தது. 

இவருடன் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் வட்டியின் அடிப்படையில் பணம் கொடுத்து மக்கள் மீது அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் கூலித் தொழிலாளி ஒருவர் அவரது மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக சுரேஷ் இடம் கடன் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: டப்பிங் பழனிசாமி... பாஜகவின் குரல் அவர்...! மு.க ஸ்டாலின் கடும் தாக்கு!

அப்போது கூலி தொழிலாளி மீண்டும் பணத்தை திருப்பி கட்டுவதற்கு தாமதமானதால், நிதி நிறுவனத்தினர் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூலித்தொழிலாளி புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுரேஷ் முறையாக அனுமதி பெறாமல் நிதி நிறுவனம் நடத்தியதாகவும், கந்துவட்டி வசூலித்ததும் உறுதியானதை அடுத்து போலீசார் சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான இருவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share