குமரியில் ரயிலை கவிழ்க்க முயற்சி.. ரயில்வே போலீசார் விசாரணை..!
கன்னியாகுமரி அருகே மங்களூர் ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து மங்களூர் செல்வதற்கு ஏதுவாக பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயிலானது இயங்கி வருகிறது. இந்த நிலையில் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வழக்கம் போல் கன்னியாகுமரியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டது.
அப்போது ரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் பெரிய அளவிலான கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ரயிலை சம்பவ இடத்திலேயே நிறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தை முடக்கிய தமிழக எம்.பி.க்கள்.. தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வலியுறுத்தல்..!
இதனால் பெரும் அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே போலீசார் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் - ஓபிஎஸ் நடுவுல புகுந்து ஆட்டையைக் கலைக்கும் டிடிவி... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டார் பாருங்க துண்டு...!