வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள்.. ரவுண்ட் கட்டிய போலீஸ்.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!
ஓசூர் அருகே 715 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை வட்டி துறைமுகங்கள் வழியாக சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசாரும் வனத்துறையினரும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தடத்தில் தொடர்புடைய நபர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்தது சிறையில் அடைத்து வரும் சூழலிலும் செம்மரக்கட்டைகள் கடத்தல் குறைந்தபாடு இல்லை. இந்நிலையில்தான் ஓசூர் அருகே பாகலூரில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி விரைந்த போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வீட்டில் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சர்வதேச சந்தையில் செம்மரக்கட்டைகளின் மதிப்பு மூன்று புள்ளி ஐந்து கோடி ரூபாய் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்தது யார் என்ற விசாரணையை போலீசார் தீவிர படுத்தினர். இந்த விசாரணையில் வீட்டு உரிமையாளர் ராஜு என்பவரை போலீசார் கைது செய்து செம்மரக்கட்டைகள் அங்கு வந்ததற்கான காரணம் மற்றும் செம்மரக்கட்டைகளை அங்கு பதுக்கியவர்கள் யார் என்றும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!
இதையும் படிங்க: குடையை மறந்துடாதீங்க மக்களே.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பு!