×
 

உயர் ரக போதை பொருள், மதுபானங்கள் விற்பனை.. எஸ்.ஐ மகன் உட்பட 7 பேர் கைது..!

கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த வழக்கில் எஸ்ஐ மகன் முற்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது போலீசார் வாகன தணிக்கையிலும் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!

 அப்போது அங்கு சந்தேகத்திற்கு இணங்க சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டதில், உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆழ்ந்த இளைஞர்களிடமிருந்து 54 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 26 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையின் போது இளைஞர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸ் சார் ஏழு இளைஞர்களையும் கைது செய்து, இந்த கடத்தல் சம்பவ பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share