தஞ்சையில் சகோதரிகள் தற்கொலை.. தலைமை காவலர்கள் பணியிட மாற்றம்..!
தஞ்சை அருகே காவல் நிலையம் முன்பு பெண் இன்ஜினியர் விஷம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவருக்கு தினேஷ் என்ற மகனும் துர்கா மேனகா கீர்த்திகா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் துர்காவிற்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் தினேஷ் அரசு பணி தேர்வுக்காக படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினேஷ்குமார் அவரது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக நடுக்காவேரி பஸ் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற போலீசார், வழக்கு விசாரணை என காரணம் கூறி தினேஷை வலுக்கட்டாயமாக பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த சகோதரிகள் இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று சகோதரன் தினேஷ் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த போலீசார் மேனகா மற்றும் கீர்த்திகா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை...தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
இதில் மனமடைந்த சகோதரிகள் இருவரும் வீட்டிற்கு சென்ற பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சகோதரிகள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தங்கையை கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மேனகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து திருவையாறு துணை போலீஸ் சுப்ரண்ட் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சகோதரிகள் இருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் மணிமேகலை மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் அறிவழகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் vs ஹார்வார்ட் பல்கலை. மோதல் முற்றுகிறது.. வரிச்சலுகை ரத்தாகும் என மிரட்டல்..!