×
 

நீதிபதி மாற்றத்தால் குழப்பம்..! பொள்ளாச்சி வழக்கில் திட்டமிட்டபடி மே 13-ல் தீர்ப்பு..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு திட்டமிட்டப்படி மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு பெண்கள், மாணவிகள் என பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாகப் பதிவு செய்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதற்குள் பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்தார். கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தின தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி மார்றப்பட்டதால், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்வி எழுந்தது. 

இதையும் படிங்க: தபால்காரருடன் சிரிச்சு சிரிச்சு கைகுலுக்கிய ஸ்டாலின்..! பங்கம் பண்ணும் பாஜக..!

இதனிடையே, திட்டமிட்டபடி மே 13 ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கிளப்பிய புது சர்ச்சை... கொந்தளிக்கும் பாஜக... பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share