×
 

புதுச்சேரி நண்பருக்கு ஸ்கெட்ச் போட்ட குரூப் கைது.. மனைவியிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசியது அம்பலம்..!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக புதுச்சேரி ரவுடி ஐயப்பன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஐயப்பன் (வயது 40). திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு, விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுச்சேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.  புதுச்சேரியின் சரித்திர குற்ற பதிவேட்டு பட்டியலில் உள்ள ஐயப்பன், சமீபத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர், ஜாமினில் வெளியே வந்தார். புதுச்சேரி போலீசாரின் கெடிபிடியால் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கரை அருகே ஐயப்பன் சில நாட்களுக்கு முன்பு தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் காவல் நிலைய போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஐயப்பன், சந்துரு என்பவருக்கு மீட்டர் வட்டிக்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், நடராஜன் என்பவருக்கும் லட்ச கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரியவந்தது. ஆனால் சந்துரு வட்டி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படும் நிலையில் ஐயப்பன் சந்துரு வீட்டிற்கு சென்று பணம் கொடுக்குமாறு  அவமானப்படுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ஜாக்பாட்... முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...! 

இதனால் ஆத்திரத்தில் இருந்த சந்துரு ஐயப்பனை கொலை செய்ய திட்டம் திட்டி உள்ளனர். இந்நிலையில், வேலையம்பாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஐயப்பன் குறித்த தகவல் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கதிர்வேல் என்கின்ற நடராஜன், மணி என்கின்ற மணிகண்டன், புவனேஷ் ஆகிய மூன்று பேர் சந்துருவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, வேலையம்பாக்கம் கிராமத்திற்கு சென்ற சந்துரு(வயது 35), முத்துக்குமார் என்கிற முத்து (வயது 29) குப்புசாமி என்கிற குப்பா (வயது 31) தனசேகர் என்கிற அஜித் (வயது 28) விவேக் என்கின்ற பெரியசாமி (வயது 25),  புஷ்பநாதன் என்கின்ற சூர்யா(வயது 26) ராஜேஷ் (வயது 22) ஆகிய ஏழு பேர் கொண்ட கும்பல் ஐயப்பனை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இது கடத்தல் சம்பவம் தொடர்பாக ஐயப்பனின் மனைவி திரிபுரசுந்தரிக்கு தகவல் தெரிந்ததை அடுத்து  சந்துருவுக்கு அழைத்து அவர் பேசியுள்ளார். தனது கணவரை விட்டு விடுமாறும் அதற்கு ரூபாய் பத்து லட்சம் கொடுப்பதாகவும் சந்துருவிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் சந்துரு பழிவாங்கும் நோக்கில் இருந்ததால் யாருமில்லாத  நீலந்தாங்கல் பெரிய ஏரி கரை அருகே ஏழு பேர் கொண்ட கும்பல் ஐயப்பனை தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில்  வெட்டி உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்களை கொடுத்த அரவிந்த் நாராயணன் தலைமறைவாகி உள்ளார். இவரைத் தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

போலீசாரால் கைது செய்யப்பட்ட 10 பேரும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி  தெய்வீகன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பெயரில் வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் புதுச்சேரியைச் சார்ந்த ஐயப்பன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி பலமுறை சீரழித்த இளைஞன்.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. ஒருதலைபட்சமாக நடக்கும் போலீஸ்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share