×
 

பொன்முடி மேல கேஸ் போட்டாச்சா? டிஜிபிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி...

பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகளிர் விடியல் பயணம் தொடர்பாக ஏற்கெனவே அமைச்சர் பொன்முடி பேசியது  சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் சமய குறியீடுகள் குறித்து பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாதுவுடன், சமய நம்பிக்கைகளை ஒப்பிட்டு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. 

சைவ சமய குறியீடுகளை மிகவும் தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடி பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கடும் கண்டனம் எழுந்தது. ஒரு அமைச்சர் இப்படியா மேடையில் பேசுவது என பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.

இதையும் படிங்க: பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!

பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை கட்சி பதவியில் இருந்து முழுவதுமாக விலக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும்,பொன்முடியின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். எனவே பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்முடிக்கு எதிராக ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து இன்று மாலை 4.45 மணிக்கு டிஜிபி பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில்,  மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கிய போது, உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.ராமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பொன்முடியின் பேச்சு தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது ஒரு புகார் மீது மட்டும் பதிவு செய்யுங்கள் என்றும் கூடுதல் வழக்குகள் பதிவு செய்தால் விசாரணை நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share