மனிதநேயத்தோடு திருச்சபையை வழி நடத்தியவர்..! பேரவையில் போப் பிரான்சிஸ்க்கு இரங்கல் தீர்மானம்..!
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போக் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறப்பு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியவுடன் கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்து மறைந்த போப் பிரான்சிஸ்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
சட்டசபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக போப் பிரான்சிஸ் முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை என பேரவையில் சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டி பேசினார்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!
மனிதநேயத்துடன் திருச்சபையை வழி நடத்தியவர் போப் பிரான்சிஸ் என்றும் நீதி மற்றும் அமைதி, மதங்களுக்கு இடையிலான அவரது முன்னெடுப்புகள் அவருக்கு பெரும் மரியாதை பெற்று தந்ததாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் அவரை இழந்து வாடும் கத்தோலிக்க திருச்சபைக்கும் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், அவரை இழந்து வாடும் கத்தோலிக்க திருச்சபைக்கும் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களுக்கும் அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி பெற நடவடிக்கை.. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்..!