×
 

குரங்கு செய்த சேட்டை! இலங்கையே இருளில் மூழ்கியது: நடந்தது என்ன?

இலங்கையில் ஒரு குரங்கு செய்த சேட்டையால், நாடுமுழுவதும் பலமணிநேரம் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டு, இருளில் மக்கள் மூழ்கினர். 

மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு, படிப்படியாக மின்சார சப்ளை ஒவ்வொரு மாகாணமாக வழங்கப்பட்டது. ஏறக்குறைய இலங்கை முழுவதும் 4 முதல் 5 மணிநேரம் வரை மின்சாரம் இல்லாமல் 2.20 கோடி மக்கள் சிரமப்பட்டனர். மருத்துவமனைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிப்படியாக மின்இணைப்பு வழங்கப்பட்டது.

இலங்கை மின்துறை அமைச்சர் குமாரா ஜெயக்கொடி நிருபர்களிடம் கூறுகையில் “ கொழும்பு நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் உள்ள பகிர்மானப் பகுதியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அதன்பின் விசாரணை நடத்தியதில் பாணந்துறை மின்கட்டமைப்பில் குரங்குகள் மோதிவிட்டன. இதனால் ஒட்டுமொத்த பகிர்மான முறையும் சிக்கலானது.

இதனால் காலை 11 மணிக்கு ஏற்பட்ட மின்துண்டிப்பு, மாலை 5.30 மணிவரை நீடித்தது. வேறுவழியின்றி நாட்டில் பலரும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் பெற்றனர்” எனத் தெரிவித்தார். மின்துறை அமைச்சர் , “ குரங்ககுள் செய்த சேட்டையால்தான் பாணந்துரை மின் நிலையத்தில் பகிர்மானத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் ஆணைபோல் போலியாக தயாரித்து கொலைக் குற்றவாளியை விடுவிக்க முயற்சி: உ.பி சிறையில் ஸ்வாரஸ்யம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் “உண்மை சம்பவத்தைவிட, ஊடகத்தில் எது தாக்கத்தை ஏற்படுத்துமோ அதை மட்டும் பேசுகிறீர்கள்.  அடுத்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அதன்பின் அறிக்கையை மாற்றிக் கூறவும்” என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில் ஏராளமானோர் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் விமர்சித்து வருகிறார்கள்,

மீம்ஸ் போடுகிறார்கள் மரியோ நவ்பால் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில் “ கொழும்பில் உள்ள துணை மின்நிலையத்தில் ஒட்டுமொத்த மின்துண்டிப்பை செய்தபின், இலங்கை முழுவதும் மின் இணைப்பை முரட்டு குரங்கு செய்துள்ளது. ஒரு குரங்குதான் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் காரணம். ” எனத் தெரிவித்தார்.
ஸ்ரீனி என்பவர் எக்ஸ் தளத்தில் கூறுகையில் “ குரங்கிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலத் (ராமாயணம், ஹனுமன்) தொடர்பு இருக்கிறது.

அந்த தொடர்புதான் இன்னும் நீடிக்கிறது”எனத் தெரிவித்துள்ளரர டெய்லி மிரர் நாளேட்டின் தலைமை ஆசிரியர் ஜமிலா ஹூசைன் கூறுகையில் “ இலங்கையில் மட்டும் குரங்குகள் மின்கட்டமைப்பு, மின்நிலையத்துக்குள் வந்து சண்டையிடுகின்றன. இந்த குரங்குகளால் நாடுமுழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மின்பொறியாளர்கள் தரப்பில் கூறுகையில் “ இலங்கையில் இதற்கு முன் ஆண்ட பல அரசுகளிடம் மின்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மின் சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும், அதற்கு நவீன எந்திரங்கள் தேவை. இல்லாவிட்டால் தொடர்ந்து மின்சார துண்டிப்பு ஏற்படும் என பலமுறை தெரிவித்துள்ளோம். தேசிய அளவிலான மின்கட்டமைப்பு மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது, அதிகமான லோடு கிடைத்தால்கூட அது நமக்கு சாதகமாக்க முடியாமல் மின் துண்டிப்பை எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அடுத்த அதிரடி: மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற புதிய வியூகம் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share