ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பழைய கட்டணமே வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது - டோல்கேட் நிர்வாகம்..!
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பழைய கட்டணமே வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது என்று டோல்கேட் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் இவை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் உள்ள சுங்கசாவடியில் வாகனங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை ஆக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருவதால், ஆங்காங்கே மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: சுங்க சாவடிகளில் உயரும் கட்டணம்.. ஆம்னி பேருந்துகள் சங்கம் கண்டனம்..
மேலும், சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணங்களாக சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை என டோல்கேட் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிதாக திறக்கப்படவிருந்த சுங்கச்சாவடி.. சூறையாடிய கிராம மக்கள்..!