4வது நாளாக தொடரும் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மேட்டூரில் மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மேட்டூரில் மின்கழக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 153வது பிரிவில் மின் கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் சேலம் மாவட்டம் மேட்டூரில் பல்வேறு ஒப்பந்த நிறுவனத் தொழிலாளர்கள் பொது ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “விருப்பமில்லாமல் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்...”- தன்னை நியாயப்படுத்தும் சீமான்..!
நான்காவது நாளாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மின் மாற்றி மற்றும் மின் கம்பங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியிடம் சொந்த தாய் மாமனே அத்துமீறிய அவலம்..! குட் டச், பேட் டச் நிகழ்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை..!