சட்டத்தின் பின் ஒளிந்தாலும் மோடி அரசு தோர்த்து விட்டது..! வறுத்தெடுத்த ராகுல்காந்தி..!
தேர்வுகளின் கண்ணியம் உறுதி செய்யப்படுவதை எந்த நிலையிலும் உறுதி செய்ய வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
தேர்வு வினாத்தாள் கசிவுகள் மாணவர்களையும் அவர்களது எதிர்காலத்தையும், குடும்பங்களையும் பாழாகிவிடும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடந்து குரல் கொடுத்து வருகிறார்.
வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் மட்டுமே இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: காங்கிரஸில் உள்ள பாஜக ஏஜெண்டுகளை நீக்க முடியுமா..? தன் கட்சிக்கு தானே கொல்லி வைக்கும் ராகுல்..!
இந்த நிலையில், 6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் வினாத்தாள் கசிவு நமது இளைஞர்களுக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது என்றும் எச்சரித்தார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, வினாத்தாள் கசிவுகள் கடின உழைப்பாளி மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மன அழுத்தத்தில் ஆழ்த்தி, அவர்களின் கடின உழைப்பின் பலனைப் பறிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கடின உழைப்பை விட நேர்மையின்மை சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறைக்கு இது அளிக்கிறது என்றும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறினார்.
நாட்டையே உலுக்கிய நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை.,எங்கள் போராட்டங்களுக்குப் பிறகு, மோடி அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அதை ஒரு தீர்வு என்று கூறியதாகவும், ஆனால் சமீபத்திய வினாத்தாள் கசிவுகள் அதையும் தோல்வியடையச் செய்துள்ளன என்றும் விமர்சித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கங்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்து வலுவான நடவடிக்கைகளை ஒன்றாக எடுக்கும்போது மட்டுமே இதற்கு முடிவு கட்ட முடியும் என அறுதியிட்டு கூறினார்.
தேர்வுகளின் கண்ணியத்தைப் பேணுவது நம் குழந்தைகளின் உரிமை, அதை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி செய்த உதவி.. தொழிலதிபராக மாறிய செருப்பு தைக்கும் தொழிலாளி...!