8 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை! வானிலை மையத்தின் புது அப்டேட்...
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடையில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அதனை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயில் இருந்து மக்கள் தங்களை ஓரளவு தற்காத்துக் கொள்ள முடிகிறது. ஆனாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் மற்றும் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘அடடா மழைடா அடமழை டா’... இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 25, 26 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களான தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வரும் 27, 28, 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் நாளை முதல் 27- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை! கூல் அப்டேட் கொடுத்த வானிலை மையம்