×
 

இந்து மதத்திற்கு திரும்பிய ராஜஸ்தான் கிராம மக்கள்... கோவிலாக மாறிய தேவாலயம்..!

ராஜஸ்தானில் சில கிராம மக்கள் தங்கள் சுய விருப்பத்துடன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறியுள்ளனர்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பழங்குடி இன கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் இந்து தெய்வத்தின் பிரதிஷ்டை உடன் கோவிலாக மாற்றப்பட்டது.

அந்த கிராமத்தின் பல குடும்பத்தினர் தங்கள் சுய விருப்பத்துடன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு திரும்பியதை தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டதாக அந்த தேவாலயத்தின் பாதிரியார் தெரிவித்தார். 

இது குறித்து பன்ஸ்வாரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் கூறும் போது "தற்போது கோவிலின் பாதிரியாராக இருக்கும் கௌதம் தராசு பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கங்கத்தலை பகுதியில் இருக்கும் தனது சோட்டலா குடா கிராமத்தில் இந்த தேவாலயத்தை கட்டி இருந்தார்.

இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது தனியார் நிலத்தில் இந்த ஆலயத்தை கட்டினார். இன்று அவர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியதால் அவருடைய தனியார் நிலத்தில் உள்ள அந்த கட்டமைப்பு கோவிலாக மாற்றப்பட்டது' என்று தெரிவித்தார்.

மாவட்ட தலைமையகத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், ஆனால் அவர்கள் இப்போது தங்கள் விருப்பத்துடன் இந்து மாதத்திற்கு திரும்பி இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

நேற்று பைரவரின் பிரதிஷ்டை விழாவிற்கு முன்பாக "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷங்களுக்கு மத்தியில் தெய்வத்தின் சிலையுடன் ஊர்வலமும் நடத்தப்பட்டது. இந்து மதத்திற்கு மாறிய பிறகு கிராமவாசிகள் ஒருமனதாக அந்த தேவாலயத்தை பைரவர் கோவிலாக மாற்ற முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து அந்த அமைப்புக்கு காவி வண்ணம் பூசப்பட்டு சிலுவை சின்னம் அகற்றப்பட்டது. சுவர்களில் இந்து மத சின்னங்களும் வரையப்பட்டன. நிகழ்வு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இனிமேல் ஞாயிற்றுக்கிழமை இதுவரை நடத்தப்பட்டு வந்த பிரார்த்தனைக்கு பதிலாக ஒவ்வொரு நாள்  காலையும் மாலையும் பைரவருக்கு ஆரத்தி இருக்கும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் அவருடைய இரண்டு மகன்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்து மாதத்திற்கு திரும்பினார்கள். கடந்த ஆண்டு மதம் மாறிய 45 கிராம வாசிகளில் 30 பேர் கௌதமை பின்பற்றி இந்து மாதத்திற்கு திரும்பினார்கள். மற்றவர்களும் இனி அவரை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கௌதமின் மனைவி தற்போது இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை தொடர்ந்து அவர் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார்.

இதையும் படிங்க: அமைச்சரின் சர்ச்சை கருத்து.. ராஜஸ்தான் சட்டசபையில் விடிய விடிய காங்கிரசார் தர்ணா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share