×
 

பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி..! காங்கிரசார் குண்டுகட்டாக கைது..!

ராமேஸ்வரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே, 545 கோடி ரூபாயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்து ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று பிரதமர் வழிபாடு மேற்கொள்கிறார். 

இந்த நிலையில் மோடி தலைமையினால மத்திய பாஜக அரசு பல்வேறு மக்கள் பெறுவது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி அவரது தமிழக வருகை எதிர்த்து கருப்பு குடி யார் பட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி என திட்டமிட்டனர். ஹிந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு, பி.எம் ஸ்ரீ பள்ளிகள், தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்காதது, டங்ஸ்டன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என மக்களை வஞ்சிக்கும் பல்வேறு திட்டங்களை மோடி அரசு மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங். குரல் டெல்லியில் எதிரொலிக்கணும்..! பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.. செல்வபெருந்தகை தடாலடி..!

எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கும் வகையில், இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். 

அதன்படி, ராமேஸ்வரத்திற்கு வர உள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருப்பு கொடிகளை கைப்பற்றி காங்கிரசாரையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இதையும் படிங்க: இதுக்கா கருப்பு கொடி காட்டுவீங்க? இதுக்கு மட்டும் பாஜக போராடுமா..? கருப்பு கொடியால் கடுப்பான செல்வப்பெருந்தகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share