×
 

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்... வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கிய ராமேஸ்வர மீனவர்கள்..!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்தி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு பின்னர் விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும், மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பல லட்சம் ரூபாய் அபராதம் வைத்து சிறையில் அடைத்து உள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதாக குற்றம் சாட்டி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் 4000 மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இதையும் படிங்க: ‘மக்களின் உடல்நலனுக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குங்கள்’.. மத்திய அரசுக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர் கைது செய்வதன் காரணமாக ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்.. திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share