புனித ரமலான் பண்டிகை.. உலக அமைதி வேண்டி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதி வேண்டி ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலக அமைதி சகோதரத்துவம் இயற்கை பேரிடர்கள் இருந்து உலக மக்களை காக்க வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் உலக அமைதி, சமாதானம் உடல் , மன ஆரோக்கியம் பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும் என சிறப்பு தொழுகை நடைபெற்றது சிறப்பு தொழுகை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..!
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒன்று கூடி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் தொழுகைக்குப் பின்பு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும் நோன்பு பெருநாளான இன்று உணவில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நோன்பின் மகிமையை அறிந்து அனைவரும் எளியவர்களுக்கு உதவ வேண்டுமென எடுத்துரைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை.. குடியுரிமை குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு..!