பர்வேஷ்க்கு பதில் ரேகா குப்தா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?? வெளி வராத தகவல்கள்..!
டெல்லி முதல்வராக பாஜக மூத்த தலைவர் பர்வேஷ் வர்மாவுக்குப் பதிலாக, ஷாலிமார் பாக் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தாவை முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினாலும் டெல்லியை வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனி வியூகம் வகுத்து ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்த முறை டெல்லி முதல்வராக யார் தேர்ந்தெடுப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் விஜேந்தர் குப்தா, ஆஷிஸ் சூத் ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.
இதில் இருமுறை எம்.பி, ஒருமுறை எம்எல்ஏவாக இருந்த பர்வேஷ் வர்மா முதல்வராக வரக்கூடும் என கணிக்கப்பட்டது. ஏனென்றால், இவரின் தந்தையும் டெல்லி முதல்வராக இருந்தவர், சித்தப்பா டெல்லி மேயராக இருந்தவர் என்பதால் அரசியல் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு பர்வேஷுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் ஷாலிமர் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தாவை முதல்வராக பாஜக அறிவித்தது. இதன்மூலம் டெல்லியில் 4வது பெண் முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவி ஏற்றக்கொண்டார். இதற்கு முன் மறைந்த சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்சித், ஆம்ஆத்மி ஆத்சி ஆகியோருக்குகப்பின் ரேகா குப்தா முதல்வராகியுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்.. தமிழக டிஜிபிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..
ரேகா குப்தா ஏன் நியமனம்: டெல்லியில் தொடர்ந்து பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் ஒரு பிரபலமான ஆள் தேவை என்பதால், ரேகா குப்தாவை முதல்வராக்கியுள்ளது பாஜக. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிக்கும் பெண்களின் ஆதரவு முக்கியப் பங்கு வகித்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை திட்டத்தை்யும் சிறப்பாக செயல்படுத்த பெண் முதல்வரால் முடியும் என்பதால் ரேகா குப்தா நியமிக்கப்பட்டார். இந்த தேசத்தில் 2வது பெண் முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவி ஏற்றார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்தார்போல் தற்போது ரேகா குப்தா உள்ளார்.
பனியா சமூகத்தை ஈர்க்க உத்தி: டெல்லியில் குஜராத்தைச் சேர்ந்த பனியா சமூகத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். ரேகா குப்தாவும் பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்தான். வர்த்தக சமூகமான பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாஜ்பாய்-அத்வானி காலத்தில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்தனர். பனியா சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்காக பனியா சமூகத்தைச் சேர்ந்த பெண்மை பாஜக முதல்வராக்கியுள்ளது. பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “ டெல்லி பாஜகவில் பனியா சமூகத்தினர்தான் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அரசின் கொள்கைகள் அனைவருக்குமானவை. ரேகா குப்தா நியமனம் பனியா சமூகத்தையும்,பாஜகவையும் இன்னும் நெருக்கமடையச் செய்யும்” எனத் தெரிவித்தார்.
முதல்வராக ரேகா குப்தா நேற்று பதிவி ஏற்றவுடன் அவருடன் சேர்ந்து பர்வேஷ் சிங், ஆஷிஸ் சூத், மஜ்ஜிந்தர் சிங், ரவிராஜ் இந்திரராஜ் சிங், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1974ம் ஆண்டு ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் பிறந்தவர் ரேகா குப்தா. பனியா சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவோடு ரேகா குப்தா நீண்டகாலம் தொடர்புடையவர், படிக்கும் காலத்தில் ஏபிவிபி அமைப்பிலும் இருந்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் 1996-97ல் மாணவர் அணித் தலைவராகவும் ரேகா குப்தா இருந்தார். டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வடக்கு பீதாம்புரா வார்டு கவுன்சிலராக 2007ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்ளாட்சி அரசியலில் ஈடுபட்டு ரேகா குப்தா, டெல்லியில் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள், சமூதாயக் கூடங்கள் அமைத்தல், நீச்சல் குளங்கள் உருவாக்குதல், பெண்கள், குழந்தைகளுக்கு நிரந்தர உடற்பரிசோதனை திட்டத்தையும் கொண்டு வந்தார்
இதையும் படிங்க: ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு சலுகை: பாஜக எதிர்ப்பு