×
 

லட்சக்கணக்கில் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பொலிவுடன் இருக்கும் குமரியின் கண்ணாடி இழை பாலம்!

கடந்தாண்டு குமரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி இலை பாலத்தை சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர்மட்டம் தாழ்வு கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படும். அதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இதனை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 37 கோடி மதிப்பீட்டில் 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி இலை கூண்டு பாடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: 'பஞ்சாயத்தை முடித்துக் கொள்வோமா உதயநிதி..? ஆனால், ஒரு சவால்..! அடங்காத அண்ணாமலை..!

தற்போது சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இங்கு கடல் நடுவே விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையினை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களிப்பதோடு இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தினம் தோறும் அதிகளவில் கண்ணாடி இலை பாலத்தினை வந்து பார்வையிடுவதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் சுமார் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரையில் கடந்த 17ஆம் தேதி வரை மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் என இந்த ஆண்டில் மொத்தமாக 3.39 லட்சத்து சுற்றுலாப் பயணிகள் இதுவரை பார்வையிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இதனை அடிப்படையாக வைத்து பார்க்கையில், நாளுக்கு நாள் பார்ப்பதற்கு கண்ணாடி இழை பாலத்தை பார்ப்பதற்கான சுற்றுலா பயணிகள் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.

இதையும் படிங்க: திரௌபதி அம்மன் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அவ்வளவுதான்.... சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share