டெல்லியில் பிரம்மாண்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்...!ரூ.150 கோடியில் 13 மாடி கட்டிடம்
ரூ.150 கோடியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம்: 13 மாடி, மருத்துவமனை, நூலகத்துடன் டெல்லியில் இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி திறக்கப்படுகிறது.
3.7 ஏக்கர் பரப்பளவில், ரூ.150 கோடியில், 13 அடுக்குமாடிகளுடன், மருத்துவ வசதியுடன், நூலகத்துடன் புதிதாக ஆர்எஸ்எஸ் அலுவலகம் புது டெல்லியில் கேசவ் கஞ்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வரும் 19ம் தேதி திறக்கப்படுகிறது.
5 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 300 அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள பிரத்யேக நூலகம் மட்டும் 8500 நூல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அவசர சிகிச்சைக்காக 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துமனையும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டிடத்தை குஜராத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அனுப் தேவ் அமைத்துள்ளார்.
இதற்கு முன் இருந்த பழைய ஆர்எஸ்எஸ் அலுவலகம் 1939ம் ஆண்டு கட்டப்பட்டது. அங்கு முதல்தளம் 1969ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து 1980ம் ஆண்டு 2வது தளமும் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப்பின் தற்போது முதல்முறையாக தனது அலுவலகத்தை பெரிதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அமைத்துள்ளது. இந்த கட்டிதத்தில் அமைத்துள்அள 3 மாடிகளிலும் தனித்தனி அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதில் முதல் கோபுரமான சாதனா டவரில் ஆர்எஸ்எஸ் நிர்வாக அலுவலகம், 10-வது மாடியில் 8500 நூல்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி-யின் மனைவிக்கு ஐஎஸ்ஐ-பாகிஸ்தானுடன் தொடர்பு..? அதிர்ச்சியூட்டும் பாஜக..!
இந்த நூலகத்தில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து படிக்கலாம். 2வது கோபுரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 9-வது தளம் பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லி வரும்போது இந்தத் தளத்தில் தங்குவார்.3வது கோபுரமான அர்ச்சனா டவரில் ஊழியர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோருக்காக 80 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர தரைத்தளத்தில் சிறிய மருத்துவமனையும், ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய கூடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பொது மக்கள் அனைவரின் பங்களிப்புடன் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 75ஆயிரம்பேர் இந்த முயற்சிக்கு ஆதரவு அளி்த்து ரூ.5லிருந்து பெரிய தொகை வரை நன்கொடை செய்துள்ளனர்.
இந்த தளத்தில் சோலார் மின்வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, மரங்கள் பயன்பாட்டைத் தவிர்க்க 1000 கிரானைட் சதுக்கங்கள், சிசிடிவி கண்காணிப்பு, மத்திய தொழிற்படை பாதுகாப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவ பல்கலை... புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூவர் குழு..