×
 

2026 தான் டெட்லைன்.. அதிமுகவை யாரும் காப்பாத்த முடியாது..! எச்சரிக்கும் சைதை துரைசாமி..!

2026ல் வெற்றி பெற விட்டால் அதிமுகவை யாரும் காப்பாற்ற முடியாது என சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளை சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறி இருந்தார். இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, வேலைவெட்டி இல்லாமல், எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த சைதை துரைசாமி கருத்துகளை கூறி வருகிறார் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். 

கே.பி.முனுசாமி பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த சைதை துரைசாமி, முதலில் தன்னை பற்றி எம்.ஜி.ஆர். பேசிய வீடியோவை செய்தியாளர்கள் மத்தியில் காண்பித்தார். அந்த வீடியோவில், சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட சைதை துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சியே ஞாபகம் வரும் என்று எம் ஜி ஆர் பேசி இருந்தார். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை பற்றி பேசிய வீடியோவை காண்பித்தார்.

இதையும் படிங்க: காமராஜர் திமுகவில் சேர்ந்திருப்பார்... எம்.ஜி.ஆர் அதிமுகவை கலைஞரிடம் ஒப்படைத்திருப்பார்… ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டி..!

 

அதில், மனிதாபிமானத்தின் மணிமகுடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும் சிறந்த மக்கள் நலத் தொண்டனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி உருவாக்கி இருக்கும் அறக்கட்டளை மற்றும் அதன் கீழ் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தின் சிறப்பையும் பார்க்கும்போது, சாதி, பேதம் பாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் சிறந்த பணிகளை ஆற்ற பிறந்தவர்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புகள்தான் என்பது உறுதிப்படுகிறது என்று கூறி இருந்தார். இலவச திருமண மண்டபத்தை உருவாக்கியிருக்கும் சைதை துரைசாமியை மனமாற பாராட்டுவதாக ஜெயலலிதா பேசி இருந்தார். 

இந்த வீடியோக்களை காண்பித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தன்னுடைய தியாகம், நேர்மை, அறம் சார்ந்த வாழ்வு, சேவை நிறைந்த செயலை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் என்னை வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்லி இருக்கிறார் என்று கூறினார். சேவை பற்றி உணராத இப்படிப்பட்ட மனிதர்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறார்கள் என நினைத்து அவர்களை பொதுமக்கள் மத்தியில் தோலுரிக்கத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என பேசினார்..

அ.தி.மு.க. நல்ல முறையில் இருக்க வேண்டும். வெற்றி பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியதாகவும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்,இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும் என தெரிவித்தார். வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாவிட்டால், இனி அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அமர பா.ஜ.க.வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும் என்று பேசினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரே மு.க.ஸ்டாலினிடம்தான் 'REVIEW' கேட்பார்- தங்கம் தென்னரசு தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share