1 - 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? வெளியானது அப்டேட்!!
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாதம் வந்து விட்டாலே தேர்வுகள் தொடங்குவது வழக்கம். பன்னிரண்டாம் வகுப்பில் தொடங்கி வரிசையாக 11ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும். இந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்… தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!!
இதே போன்று, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களே உஷார்! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!