கொளுத்தி எடுக்கும் வெயில்.. மாணவர்களுக்கு குட் நியூஸ் அளித்த பள்ளிகல்விதுறை..!
வெயிலின் தாக்கம் கருதி தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் ஆண்டு தேர்வை நடத்த வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏற்கனவே ஏப்ரல் 21ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதியே முடிக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: கோடை வெயில் முன்னெச்சரிக்கை.. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது.. பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை..!
ஆனால், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்" என குறிப்பிடப்பட்டள்ளது.
இதையும் படிங்க: இப்படி பண்ணா எப்பிடிங்க..? டென்ஷனான நடிகர் விக்ரம்.. தியேட்டர் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்..!