×
 

ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு...பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வரும் 24ஆம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு பெறுகிறது. எனவே, 25 ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில், கோடை விடுமுறை 25ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வரும் 30-ஆம் தேதி இறுதி வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாதத்தை இந்தியாவில் வேரறுக்க உதவுவோம்- உறுதிப்படுத்திய சவுதி அரேபியா..!

இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மாநாடு.. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதலா.? அவசரமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share