×
 

10 நாள் நக்சல் வேட்டை.. முக்கிய தலை உட்பட 48 பேர் அவுட்.. ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர் காலி..!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் வேட்டையில் முக்கிய தளபதி உட்பட 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் மாநிலம் விளங்குகிறது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது, அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. துப்பாக்கிசூடு சண்டையில் நக்சல்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

அன்றைய தினம் சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பீஜப்பூர் என்கவுன்ட்டரில் டிஆர்எஃப் வீரர் ராஜு ஒய்யாமி வீரமரணம் அடைந்தார். அவருக்கு அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஒரேநாளில் 30 நக்சல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது அப்போது பரபரப்பாக பேச பட்டது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பலரைகொன்றதன் மூலம் இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் பாதுகாப்பு படைகள் மற்றொரு பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமித்ஷா போட்ட ட்வீட்.. உருட்டல், மிரட்டல் எங்ககிட்ட வேணாம்.. சேகர்பாபு எச்சரிக்கை..!

நக்சலைட்களுக்கு இரக்கம் காட்டாத அணுகுமுறையுடன் மோடி அரசு முன்னேறி வருகிறது. சரண் அடைவது முதல் தேசிய நீரோட்டத்தில் இணைவது வரை அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. சரணடையாத நக்சலைட்களுக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டப்படாது. அதில் அரசு உறுதியாக உள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும் எனவும் அமித் ஷா சூளுரைத்தார். இதனை அடுத்து நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.

இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் இயக்கத்தினர் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்துள்ளது.  இதனை தொடர்ந்து தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து அப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில், நக்சல் இயக்கத்தினர் 18 பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர். அதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்லப்பட்டவர்களில் நக்சல்களின் தளபதி ஜெகதீஷ் என்கிற புத்ராவும் ஒருவர் என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது. இவரது தலைக்கு ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் இருந்த அவர், தற்போது கொல்லப்பட்டு இருப்பது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்த முக்கியமான வெற்றி என அதிகாரிகள் கூறினர். இவ்வாறு கடந்த 10 நாட்களில் நடந்த தொடர் ஆபரேஷன்களில் மட்டும் 48 நக்சல்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இதுக்குதாங்க அமித் ஷாவை சந்தித்தேன்.. எடப்பாடி பழனிசாமி சொல்ல வர்றது என்னன்னா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share