×
 

திரள்நிதி திருடுற உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா...! சீமானை ஒருமையில் சாடிய வருண்குமார் ஐபிஎஸ்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கும் இடையிலான வார்த்தை போர் தற்போது சற்றே முற்றியுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கும் இடையிலான வார்த்தை போர் தற்போது சற்றே முற்றியுள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகனை கைது செய்யப்பட்டார். இதன் பிறகு சில ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோ லீக்கிற்கு காரணம் எஸ்.பி.வருண்குமார் தான் சீமான் குற்றச்சாட்டினர். அவரது சாதியைக் குறிப்பிட்டும், அவரது மனைவி பற்றியும் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார். 

இதையடுத்து, டி.ஐ.ஜி. வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி குற்றவியல் நீதிமன்றம் 4ல் ஆஜரான டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய கடமையை செய்ததற்காக தன்னை குறித்தும் தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர் எனக் குற்றச்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....

இந்த வழக்கின் விசாரணை இன்று திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி பாலாஜி முன்பு  நடைபெற்றது. அப்போது விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்த அவர், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் இன் பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,” கொஞ்சநஞ்சம் பேச்சா.. திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..” என கையில் லத்தியுடன்பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை குறிப்பிட்டு தான் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவு, சென்னையில் திமுக புகார்...கைதாகிறார் சீமான்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share