×
 

திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!

தி.மு.க.,வுக்கு எதிராக, ஓட்டுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்தை சீமான் வரவேற்றுள்ளார்.

கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய கல்விக்கொள்கை இல்லம் தேடி கல்வியில் தான் வருகிறது. நாம் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோமா, ஏற்கிறோமா என்று தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என கூறினார். இல்லம் தேடி கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டு உள்ளோம் என்றும் கல்வி ஆய்வாளர்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கை நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கிற மரண சாசனம் என்று சொல்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது என பேசிய சீமான், எந்ந நாட்டிலும் இல்லாத வகையில் இந்த நாட்டில் மட்டும் தான் விரும்பிய கல்வியை படிப்பதில் அவ்வளவு தடையாக இருக்கிறது என கூறினார். மருத்துவத்தில் பி.ஜி., படிக்க மறுபடியும் நீட் எழுத வேண்டி இருக்கிறது என்றும் மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவமதிக்கும் அண்ணாமலை… கழறும் தேமுதிக..? சீமானுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி..!

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் என்ன தேர்வு எழுதுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுகவிற்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற இபிஎஸ் கருத்தை வரவேற்ற அவர், இதில் தான் முதன்மை ஆளாக இருப்பேன், 

எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள். நான் மட்டும் தனியாக நிற்பேன். நான் மட்டும் தான் உருப்படியாக நிற்கிறேன் என பதில் அளித்தார்.

இதையும் படிங்க: எனக்கு ஜாமீன் வேணும்... சென்னை ஐகோர்ட்டில் சீமான் வீட்டு பாதுகாவலர் மனு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share