'சீமான்- பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதில்லை..!' ரகசியத்தை உடைத்த புகைப்பட தடயவியல் நிபுணர்..!
சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்யப்பட்ட போட்டோ என்று கூறியது நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா? அவருடன் எடுத்த போட்டோ எடிட்டிங் செய்யப்பட்டதா? என்கிற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை அவருடன் எடுத்த போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கிளப்பிய புயல் தான் சில வாரங்களாக தமிழக அரசியலில் புயலாக மையம் கொண்டிருக்கிறது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள சீமான், '' போலி என்பதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். அந்த புகைப்படத்தில் இருக்கும் போட்டோவில் நானும், என் அண்ணனும் ஒட்டி வெட்டியதாக சொன்னீர்களே... அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். 15 வருடங்களாக இந்தப் படம் இருந்தது. அப்போதெல்லாம் எங்கே போய் படுத்திதீர்கள். இந்த படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் என்று சொல்பவர்கள் அப்போதே இதை சொல்லி இருக்கலாம் அல்லவா? எங்கே எடிட் செய்ததை நிரூபித்துக் காட்டுங்கள்'' என சவால் விடுத்தார்.
பெரியார் பற்றிய சீமானின் கருத்து ஒரு பக்கம் தீயாய் எரிந்து கொண்டிருக்க, பிரபாகரனை, சீமான் சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற கருத்து அரசியல் களத்தை மேலும் சூடாக்கி இருக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் சீமான் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் புகைப்படம் நாம் தமிழர் கட்சியிலன் எல்லா மேடைகளிலும் பிரதானமாக இடம்பெற்று இருக்கும்.எல்லா மேடைகளிலும் பிரபாகரனை சந்தித்தித்ததை சிலாகித்து பேசுவார் சீமான். இந்த நிலையில்தான் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்யப்பட்ட போட்டோ என்று கூறியது நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: '10 நிமிட சந்திப்பு... வெளிவராத புகைப்படங்கள்... உளவு பார்த்தாரா சீமான்..?' - புது பகீர் கிளப்பும் ராஜீவ்காந்தி..!
இது பற்றி சமூக வலைதளத்தில் பிரபல சமூக இணையதள வல்லுனர் ஹரிஹர சுதன் தங்கவேலு வெளியிட்டுள்ள பதிவில், ''சீமானுடன், பிரபாகரன் இருக்கும் படம் ஒரிஜினல் தான் என்று கூறியுள்ளார். புகைப்பட தடையவியலில் இ.எல்எ அதாவது எரர் லெவல் அனலசிஸ் அடிப்படை சோதனை என்றும் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருந்தால் அழுத்த வேறுபாடுகளை வைத்து அது எந்த பகுதி என்பதை காட்டி விடும் என்றும் அவர் கூறியுள்ளார் பிரபாகரனுடன், சீமான் இருக்கும் புகைப்படத்தில் எடிட் செய்த பகுதிகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு வல்லுனர் சங்கராஜ் சுப்பிரமணியம் இது குறித்து பேசியபோது, ''100 சதவிகிதம் எடிட் செய்த போட்டோ என்பதை துல்லியமாக நிரூபித்து விட முடியாது. இன்றைக்கு ஒரு ஜேபேக் இமேஜை எத்தனை தடவை அப்ளை செய்தீர்கள், எங்கிருந்து எடுத்து அப்ளை செய்தீர்கள் ? எப்போது ரிலீஸ் செய்தீர்கள் என்பதைப் பொறுத்து மாறும். மற்றொருபுறம் ஒரு இமேஜை சரியான முறையில் எடிட் செய்து சரியான முறையில் கம்பரைஸ் செய்தீர்கள் என்றால் அதை நிரூபிப்பது கஷ்டம்''என விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி