நித்யாவை பெருமைப்படுத்தி.. இ.பி.எஸை இழிவாக்கி.. கடுப்பில் 'சாட்டை'யை தூக்கி எறிந்த சீமான்..!
அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்
திருச்சி சாட்டை துரைமுருகன் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாட்டை" வலையொளிக்கும் அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்; விஜய், சீமானுக்கு பறந்த தூது.. எடப்பாடிக்கு இப்படியொரு நிலைமையா?
சாட்டை துரைமுருகன் ஒரு பிரபலமான தமிழ் யூடியூபர், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக இருக்கிறார். அவர் "சாட்டை" என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அரசியல், சமூகப் பிரச்சினைகள், தமிழ் தேசியம் தொடர்பான விவாதங்களை பதிவு செய்கிறார். அவரது வீடியோக்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன. அவர் பலமுறை அவதூறு, பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனல் "சாட்டை" என்ற பெயரில் இயங்குகிறது. இதன் மூலம் அவர் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறுகிறார். அவரது சமீபத்திய வீடியோக்களில் அரசியல் தலைவர்கள், நிகழ்வுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. அவரது வீடியோக்களின் உள்ளடக்கம் ஆதரவாளர்களிடையே பிரபலமாக இருந்தாலும், சிலர் அவரை விமர்சிக்கின்றனர், மேலும் அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சீமானின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.