சிவராத்திரியில் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சரின் மகள்..! தோழிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசேனா குண்டர் கைது
சிவராத்திரி விழாவின் போது மத்திய அமைச்சரின் மகள் மற்றும் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் ஒருவரின் மகள் மற்றும் அவருடைய தோழிகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சாதாரண பொது மக்களை பற்றி நினைத்துப் பாருங்கள். மகாராஷ்டிராவின் ஜல்கானில் சிவராத்திரி விழாவை சந்த் முக்தாய் யாத்திரை நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சரான ரக்ஷா கட்ஷேவின் மகள் மற்றும் மகளின் தோழிகள் பங்கேற்றனர். வழக்கமாக இது போன்ற விழாக்காலங்களில் இளம்பெண்களை கேலி, கிண்டல் பேசும் இளைஞர் குழுவினர் அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ அமைச்சர் மகளிடமும் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான ரக்ஷா உடனடியாக மும்பை விரைந்து வந்தார். தனது மகளுக்கும் தோழிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் பற்றி முக்தைநகர் போலீசாரிடம் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஏழு பேர் மீதபோலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, "ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் யாத்திரை நடைபெறும். இரண்டு நாட்களுக்கு எனது மகளும் அந்த யாத்திரையில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், பணம், மதுவுடன் உல்லாசத்துக்கும் அழைப்பு; தட்டித் தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்
அப்போது சில இளைஞர்கள் அவரை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். பின்னால் இருந்த தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஒரு தாய் என்கிற முறையில்நான் காவல்நிலையம் வந்தேன்" என்று தெரிவித்தார். ஒரு எம்பி அல்லது மத்திய அமைச்சரின் மகளுக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்தால் சாதாரண பொது மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் முதலமைச்சரிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் குற்றவாளிகளை கைது செய்ய கோரி வலியுறுத்த வந்திருக்கிறேன். நான் ஒரு மத்திய மந்திரியாக வரவில்லை நீதி கேட்கும் தாயாக வந்துள்ளேன் என்றார் அவர். மேலும் அவர் பேசுகையில் எந்த ஒரு அரசியல் அழுத்தம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிகளின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வைத்துள்ளதால் ஐடி சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
அரசியல் பின்னணி இளைஞர்கள்: இந்த சம்பவத்தின் போது, குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அமைச்சரின் பாதுகாப்பு பணியாளரின் சட்டையைப் பிடித்து அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றப்பின்னணி உள்ளவர்கள், மேலும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சந்திரகாந்த் பாட்டீலுடன் தொடர்புடையவர்கள் என்றனர். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்றார். அவர் கூறுகையில், மத்திய அமைச்சரின் மகளை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். இது ஒரு இழிவான செயல், அவர்கள் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மன்னிக்க முடியாது, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கூறுகையில், "முக்தைநகர் தாலுகாவின் கோதலி கிராமத்தில் ஒரு யாத்திரை நடந்தது. அதில் முக்தைநகரைச் சேர்ந்த அனிகேத் கூய் மற்றும் அவரது 6 நண்பர்களும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூன்று நான்கு சிறுமிகளைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். நாங்கள், அவர்கள் மீது பின்தொடர்தல், துன்புறுத்துதல், போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு மாணவியிடம் அட்டகாசம் செய்த தமிழாசிரியர்.. பாடம் புகட்டிய போலீசார்..