ஷேக் ஹசீனாவின் 124 வங்கி கணக்குகள் முடக்கம்..! சொத்துக்கள் பறிமுதல்.. நீதிமன்றம் அதிரடி..!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்யவும், 124 வங்கி கணக்குகளை முடக்கவும் டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷேக் ஹசீனாவின் பிள்ளைகளான சஜிப் வாஜித் ஜோய் மற்றும் சைமா வாஜித் புதுல் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுதா சதன் என்ற சொத்து, அவரது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ரத்வான் முஜிப் சித்திக் ஆகியோரின் அசையா சொத்துகளும் இதில் அடங்கும்.
டாக்கா பெருநகர மூத்த சிறப்பு நீதிபதி ஜாகிர் ஹொசைன், பங்களாதேஷ் ஊழல் தடுப்பு ஆணைய (ACC) துணை இயக்குநர் மொனிருல் இஸ்லாமின் மனுவை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்தார். ஹசீனா மற்றும் பிறர் இந்த கணக்குகளில் உள்ள பணத்தை மாற்ற முயல்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த கணக்குகளில் குறைந்தபட்சம் 600 கோடி ரூபாய் பணம் உள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் பதற்றம்… நாடு முழுவதும் 'ஆபரேஷன் பிசாசு வேட்டை...' முகமது யூனுஸின் அரக்கத்தனம்..!
ஹசீனா, ரெஹானா, ஜோய், புதுல் மற்றும் ரெஹானாவின் பிள்ளைகளான ரத்வான், துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் ருபோன்டி ஆகியோருக்கு வெளிநாடு செல்ல பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுதா சதன், தன்மோண்டியில் 16 கத்தா நிலத்தில் (சுமார் 22,000 சதுர அடி) கட்டப்பட்டு, 3.3 கோடி டாக்கா மதிப்புடையது. இது ஹசீனாவின் மறைந்த கணவர் வாஜித் மியாவால் வாங்கப்பட்டு, ஜோய் மற்றும் புதுல் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
மேலும், ரெஹானாவின் மகள் துலிப்பின் குல்ஷானில் உள்ள 43 லட்சம் டாக்கா மதிப்புள்ள பிளாட், ரெஹானா பெயரிலுள்ள இரு சிறு நிலப்பகுதிகள், ரத்வானின் பிளாட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பங்களாதேஷ் அவாமி லீக் (37.82 கோடி), பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் மெமோரியல் டிரஸ்ட் (478.81 கோடி), சென்டர் ஃபார் ரிசர்ச் அண்ட் இன்ஃபர்மேஷன் (55.74 கோடி), சுசோனா அறக்கட்டளை (31.60 கோடி) ஆகியவற்றின் கணக்குகளும் முடக்கப்பட்டன.
கடந்த டிசம்பர் 17ம் தேதி அன்று, ரூப்பூர் அணுமின் நிலையம் உள்ளிட்ட ஒன்பது திட்டங்களில் 80,000 கோடி டாக்கா மோசடி செய்ததாக ஹசீனா மற்றும் குடும்பத்தினர் மீது ACC விசாரணை தொடங்கியது. டிசம்பர் 22ம் தேதி அன்று, ஹசீனா மற்றும் ஜோய் அமெரிக்காவிற்கு 300 மில்லியன் டாலர்களை பணமோசடி செய்ததாகவும் விசாரணை துவங்கப்பட்டது. கடந்த திங்களன்று, புர்பச்சல் புதிய நகர திட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து நிலங்களை பெற்றதாக ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகை ACC-யால் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
சொந்த நாடு திரும்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு எதிராக அவரது எதிரிகள் அடிமேல் அடி கொடுத்து வருவதால், அவர் நாடு திரும்பவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!