×
 

காந்தி, நேருவையே ஓடவிட்டோம்... தமிழ் நாட்டில் மோடி- அமித்ஷாவை விட்டுவிடுவோமா..? -ஆ.ராசா சவால்..!

காமராஜரால் முடியாததை, நேருவால் முடியாததை, காந்தியால் முடியாததை, சர்தார் வல்லபாய் பட்டேலால் முடியாததை தமிழ்நாட்டுக்கு வந்து நீங்கள் திணித்து விடுவீர்களா? மோடி அமித் ஷாவை நாங்கள் விட்டுவிடுவோமா?

மத்திய அரசு தமிழக அரசுக்கு கல்வி நிதி வழங்காதது இந்த விவகாரத்தில் கவுண்டமணி- செந்தில்  வாழைப்பழ நகைச்சுவை போல் நாடாளுமன்றத்தில் நடப்பதாக திமுக எம்.பி-யும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

சென்னை, கொறுக்குப்பேட்டையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், '' இந்தித் திணிப்பு விவகாரத்தில் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் ஐந்தாறு புயல்கள் வந்து சென்றன. நாங்கள் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டோம். தேசிய பேரிடர் நிதி, மாநில பேரிடர் நிதி என்று குஜராத்திற்கு கொடுக்கிறீர்கள். இன்றைக்கு எங்கெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்கள் இருக்கிறதோ, அந்தந்த மாநிலங்களுக்கு எல்லாம் நிதி அள்ளி கொடுக்கிறீர்கள்.

எங்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டோம். அதுதான் இது என்கிறார்கள். நான் திரும்ப சொன்னேன். இரண்டு இருக்கிறதா? இருக்கு. ஒன்று இது... கொடுத்துட்டீங்க. இன்னொன்று எங்கே  என்று கேட்டேன். அதுதான் இது என்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? கவுண்டமணியும், செந்திலும் செய்யும் நகைச்சுவையை நாடாளுமன்றத்தில் வந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இது நேரு காலத்திலேயே முடிவு செய்த பிறகு இப்போது மோடியும், அமித்ஷாவும் வந்து இந்தியை நாங்கள் திணிப்போம் என்றால் எப்படி?

இதையும் படிங்க: நான்தான் உலகின் மிகப் பெரிய பணக்காரன்..! மார்தட்டும் பிரதமர் மோடி..!

 

நாங்கள் நேருவையே பார்த்தோம். நேருவுக்கு கடும் எதிர்ப்பு காட்டினோம். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நேருவையேநா ங்கள் ஓட விட்டோம். சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியை நாங்கள் விமர்சித்தோம். இவ்வளவு பெரிய காங்கிரஸ் இயக்கத்தையே கூப்பிட்டு ஓட விட்டோம். அவ்வளவு பெரிய காமராஜரை நாங்கள் எதிர்த்து நின்றோம். காமராஜரால் முடியாததை, நேருவால் முடியாததை, காந்தியால் முடியாததை, சர்தார் வல்லபாய் பட்டேலால் முடியாததை தமிழ்நாட்டுக்கு வந்து நீங்கள் திணித்து விடுவீர்களா? மோடி அமித் ஷாவை நாங்கள் விட்டுவிடுவோமா?'' என சவால் விடுத்துள்ளார்ஆ.ராசா.

 

 

இதையும் படிங்க: தாதாவாக மிரட்டும் டிரம்ப்… உக்ரைனின் நிலைமை நாளை இந்தியாவுக்கும் நேரலாம்… என்ன செய்வார் மோடி..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share