×
 

7000 கோடி ரூபாய் மதிப்புள்ள சோலார் திட்டங்கள்...! 3500 பேருக்கு வேலை... கலக்கும் தமிழக முதலமைச்சர்

7000 கோடி ரூபாய் மதிப்புள்ள சோலார் திட்டங்கள்...! 3500 பேருக்கு வேலை..

தென் தமிழகத்தின் முக்கிய பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் 4400 கோடி ரூபாய் மற்றும் 3100 கோடி ரூபாய் என இரண்டு மிகப்பெரிய மின் திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் பெரிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. 1 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அவரோடு அமைச்சர்கள் துரைமுருகன் கே என் நேரு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். டாட்டா குழுமத்தின் சார்பில் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த டாட்டா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை மொத்த மதிப்பீடு ரூ 4400 கோடி ஆகும் இந்த புதிய ஆலையின் மூலம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று விக்ரம் சோலார் நிறுவனத்தின் சார்பாக 3125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மற்றும் ஒரு சோலார் ஆலைக்கான அடிக்கல்லை முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டினார். இந்த புதிய ஆலையால் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக 80 சதவீதம் பெண்களுக்கும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என விக்ரம் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள சோலார் ஆலை தான் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் திட்டமாகும் என தெரிவித்தார். விழா மேடையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் போது மறைந்த தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாட்டாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு திமுகவினரும் பொதுமக்களும் வழிநெடுகளும் கூடி உற்சாகமாக வரவேற்றனர். பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சோலார் மின் திட்டங்கள் தென்பகுதியில் நிறுவப்பட உள்ளதால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்படுமென திருநெல்வேலி பகுதி மக்கள் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share