×
 

மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலை ரயில்.. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

கோடை காலம் துவங்கியதை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுப்பாளையம் உதகை மலை பகுதிகளில் உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் அமைக்கப்படுவது வழக்கம். பூக்கள், வனவிலங்குகள் பூங்கா என பல்வேறு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதன் கூடுதல் சிறப்பாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் விளங்கி வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஏங்கி நிற்பர்.

இதனால் இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே நிறைவடைந்து விடும். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தரவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. ஹோலி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு..

இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சிறப்பு மழை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக நாளை காலை  7. 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், பகல் 2 மணிக்கு உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் சிறப்பு மலை ரயிலின் சோதனையோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து மார்ச் 28ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையில் கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் ஒரு வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வாரம் தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் சென்றாலும் இப்படியா? கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு 7 மாதம் ஜெயில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share