கரும்புக்கான புதிய கொள்முதல் விலை நிர்ணயம்... தமிழக அரசு உத்தரவு..!
கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரும்புக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்தந்த மாவட்ட விவசயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அய்யா வைகுண்டர் வழிச்சென்று மனிதம் காப்போம்... முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலையானது, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, சர்க்கரைத் தொழில் சங்கங்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, விவசாய செலவுகள் மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. தற்போது, 2024-25 ஆம் ஆண்டு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
கரும்புக்கான கொள்முதல் விலையாக 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3344.20 ஆக நிர்ணயம், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.3,532.80 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் ஊக்கத்தொகையும் அதனுடன் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நோயாளிகளுக்கு ஏற்றார் போல் மருத்துவர்களை நியமனம் செய்யுங்கள்.. வலுக்கும் கோரிக்கை..!