×
 

பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தூக்கி எறியப்படுவார்கள்.. சுவேந்து அதிகாரி பேச்சால் சர்ச்சை..!

பாஜக ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மிரட்டும் தொனியில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் எம்எல்ஏக்கள் ஹிமாயுன் கபீர், சித்திக்குல்லா சவுத்ரி ஆகியோர் சுவேந்து அதிகாரி மன்னிப்புக் கேட்காவிட்டால், அவரின் பேச்சை 72 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறாவிட்டால், 42 முஸ்லிம் எம்எல்ஏக்களால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் “பாஜக போலி இந்துத்துவாவை மாநிலத்துக்குள் கொண்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரி “பாஜக ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து தூக்கி எறிவோம்” என்றார்.

இதையும் படிங்க: தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.. சச்சரவுகளை தடுக்க உ.பி.அரசு நடவடிக்கை..!

இதையடுத்து, சுவந்த் அதிகாரியின் பேச்சையடுத்து சட்டப்பேரைவயில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமான் பாணர்ஜி உத்தரவிட்டார். ஆனால், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து நேற்று சட்டப்பேரவைக்கு வந்தனர்.

எம்எல்ஏக்கள் போராட்டத்தை தலைமை ஏற்றுநடத்திய பாஜக தலைமை கொறடா சங்கர் கோஷ், எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். சட்டப்பேரைவயில் போராட்டம் நடத்திவிட்டு, வாயிலில் அமர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்திருந்த சுவேந்து அதிகாரி ஊடகங்களிடம் பேசுகையில் “சட்டப்பேரவைக்குள் எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு சபாநாயகர்தான் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி “பாஜக இந்து என்ற மத அடையாளத்தை வைத்து மாநிலத்தில் அரசியல் செய்கிறது. முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுவேன் என்று சொல்வதற்கு எப்படி அவர்களுக்கு துணிச்சல் வந்தது. எங்கள் கட்சியில் இருக்கும் முஸ்லிம் தலைவர்களுடனும் நான் பேசினேன். பாஜகவில் அவ்வாறு அவதாறூக பேசுவதால்தான் அவரை தலைவராக நியமித்துள்ளனர் என்றேன்” எனத் தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சட்டப்பேரவைக்கு வெளியே நின்று, தொடர்ந்து மம்தா பானர்ஜியை விமர்சித்தார். அவர் பேசுகையில் “மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு எதிரானவர். மகா கும்பமேளாவை மிர்தியூர் கும்பமேளா என்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழாவில்கூட அவர் பங்கேற்கவில்லை.

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட கதி மம்தாவுக்கம் ஏற்படும். 2021ம் சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் அவரை தோற்கடித்துவிட்டேன் என்பதால் என் மீது மம்தா கோபமாக இருக்கிறார். 2026 தேர்தலில் பவானிபூர் தொகுதியில் மம்தா தோற்பார்.

எங்கள் கட்சிக்கு சிறுபான்மையானர்களை வாக்கு வங்கியை வைத்திருக்கத் தேவையில்லை, ஏனென்றால் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க போவதில்லை. திரிணமூல் காங்கிரஸ் ஒரு இந்து எம்எல்ஏ கூடஇல்லை, முஸ்லிம் எம்எல்ஏக்கள்தான் வென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: இஸ்லாமியர்- கிறிஸ்தவர் பட்டியல் சமூக வாக்குகள் சிதறடிப்பு- பதறும் திருமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share